Categories
உலக செய்திகள்

கம்மியான விலை தான்…. நிறைவேறும் ஜன்னல் சீட் கனவு…. குழந்தைகள் குதூகலம் …!!

நாம் அனைவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நாம் பேருந்தாக இருக்கட்டும், ரயிலாக இருக்கட்டும் எதிலும் சென்றாலும் ஜன்னல் அருகே அமர்ந்து செல்வது தனிரகம். அதே போல நம்முடைய எண்ணம் விமானத்தில் நிறைவேறிவிடாதா ? என்ற எதிர்பார்ப்புடன் நாட்களை கடந்து வருகின்றோம்.

பலருக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை, கனவு நிறைவேறாமலேயே இருக்கின்றது. விமானத்தில் செல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை என்றாலும், அதை அருகிலிருந்து பார்க்க வேண்டும், அதை அதனருகே சென்று தொட்டு பார்க்க வேண்டும் என்றெல்லாம் அடுத்தடுத்து ஆசைகள் உருவாகின்றது.

இப்படியான மனநிலையில் உள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல சிங்கப்பூர் நாட்டில் ஒரு வினோதம் நடைபெற்றுள்ளது. அதுவும் விமானத்தில் விண்டோஸ் சீட்டில் வீட்டில் அமரும் சூழலில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்துஉள்ளதால் இது பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளால் பல விமானங்கள் போக்குவரத்து சேவை இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பயன்பாடின்றி நிறுத்திவைக்கப்பட்ட விமானம் மூலம் லாபம் ஈட்ட நினைத்த சில விமான நிறுவனங்கள் விமானத்தை ஹோட்டலாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. ஏ380 ரக விமானங்கள் மக்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் அதனுள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |