சீனாவில் ஆரம்பித்த கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நோயினால் இதுவரை 4000-த்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100000த்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கோயில் குருக்கள் ஒருவர் தெய்வ விக்கிரகங்களுக்கே முகமூடி அணிவித்துள்ளார். வாரணாசி கோயில் குருக்கள் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறுகையில், “விஸ்வநாதக் கடவுள் சிலைக்கு முகமூடி அணிவித்துள்ளேன். இது எதற்காகவென்றால் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக” என்று கூறினார்.