இந்தியாவில் பரவலாக பரவிய வெட்டுக்கிளிகளின் அராஜகத்தை நவீன தொழில்நுட்பம் கொண்டு முறியடித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
நடக்கின்ற 2020 ஆம் ஆண்டில் பிரச்சனைகள் இல்லாத நாட்கள் இல்லை. அதாவது கொரோனா, தீவிரவாத தாக்குதல், கனமழை, வெள்ளம் போன்ற பெரும் அழிவை தரக்கூடிய சூழல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இதில் சமீபத்தில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் இந்தியாவிற்கு வந்தது. இதனை எவ்வாறு இந்தியா கட்டுப்படுத்தியது? என்பது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஜான்சி ராணி லட்சுமி பாய் விவசாய பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருக்கும் கல்லூரி மற்றும் நிர்வாக அலுவலக புதிய கட்டிடங்களை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அதன்பின் பேசிய அவர், வெட்டுக்கிளிகளால் இந்தியாவில் ஏற்கனவே 10 மாநிலங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதை ஒழிக்க நவீன இயந்திரங்களை வாங்கி மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் வெட்டுக்கிளிகளை கொள்வதற்காக மருந்துகளை தெளிக்க ஹெலிகாப்டர்களும், டிரோன்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். இந்த அரிய செயல்களை கொண்டு வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்தி பேரிழப்பு ஏற்படுவதில் இருந்து விவசாயிகளை அரசு காத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.