கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இலங்கை தமிழர் Gary Anandsangaree-க்கு புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.
இலங்கை தமிழரான Gary Anandsangaree கனடாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியை பெற்றதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி ஏற்றார். இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய பொறுப்பு ஒன்றை Gary Anandsangaree-க்கு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
I am honoured to be appointed as Parliamentary Secretary to the Minister of Justice & Attorney General of Canada. I look forward to working alongside Minister @DavidLametti to advance justice, equality & reconciliation in Canada🇨🇦 Thank you for this opportunity @JustinTrudeau 🤝 https://t.co/R9aLzqlVxi
— Gary Anandasangaree (@gary_srp) December 3, 2021
அதன்படி Gary Anandsangaree சட்டத்தரணியின் நாடாளுமன்ற செயலாளர் மற்றும் நிதித்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து Gary Anandsangaree, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாய்ப்பினை தனக்கு வழங்கியதற்காக மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.