தொற்றை பொருட்படுத்தாமல் சாதாரண காய்ச்சல் என்று முகக் கவசமின்றி சுற்றி வந்த பிரதமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து வருகின்றது பிரேசில். நேற்று வரை 16 லட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்ட அங்கு 65 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மரணமடைந்துள்ளனர். ஆனால் அந்நாட்டு அதிபர் பொல்சனரோ கொரோனா தொற்று சாதாரண காய்ச்சல் போன்றதுதான் என கூறியதோடு, சமூக விலகல் அறிவுரைகளை பொருட்படுத்தாமல், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பிரேசிலில் புகைப்படம் எடுப்பது, ஊரடங்கு அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்தது, ஊரடங்கு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என வாதிட்டது என தொடர்ந்து கொரோனா தொற்றை பொருட்படுத்தாமல் இருந்துவந்தார்.
இன்னிலையில் சில தினங்களாக காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் பொல்சனரோவுக்கு இருந்ததால் அவருக்கு தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டு, அதில் அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொது இடங்களில் முக கவசம் அணிவதை தவிர்த்து வந்த பொல்சனரோ தற்போது முகக் கவசங்கள் அணிய தொடங்கியுள்ளார். இதனை இணையதளத்தில் ஏராளமானோர் குறிப்பிட்டுள்ளனர்.