நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் திட்டியதால் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள காமாட்சி நகரில் சீனிவாசன் என்பவர் அவரது மனைவி சுமதி மற்றும் பாரதி(20) மற்றும் ஸ்ரீநிதி(17) ஆகிய 2 மகள்களுடனும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ரீநிதி தற்போது கொரோனா காரணமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக படித்து வந்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீநிதி அடிக்கடி செல்போன் பார்த்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவி இரவு விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் மேல்சிகிச்சைக்காக ஸ்ரீநிதியை கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து ஸ்ரீநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.