Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடனை கேட்டதால் வந்த பிரச்சனை… கரும்பு ஆலை உயிரிமையாளர் செய்த காரியம்… பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு…!!

கடனை திருப்பி கேட்டதில் நடைபெற்ற தகராறில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததற்காக கரும்பு ஆலை உயிரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள துத்திக்குளம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் கரும்புச் சாறு எடுக்கும் ஆலையை நடத்தி வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மலைவேப்பன்குட்டையில் வசிக்கும் சிவக்குமார் என்பவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது சிவக்குமார் கடனாக கொடுத்த பணத்தை செந்திலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் சிவகுமாருக்கும் செந்திலுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சிவகுமார் மலைவேப்பன்குட்டையை சேர்ந்த அவரது நண்பர் முருகேசனிடம் சென்று உதவி கேட்டுள்ளார். இந்நிலையில் முருகேசனும் செந்தில்குமரை சந்தித்து பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகேசனை தாக்கியுள்ளார். இதனை பார்த்த சிவக்குமார் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனைதொடர்ந்து படுகாயமடைந்த முருகேசன் அவரது மகன் லோகேஷ் சர்மாவை செல்போனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த லோகேஷ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே துரதிஷ்டவசமாக முருகேசன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து லோகேஷ் சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்குமாரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |