மக்களவை தேர்தலையடுத்து பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப வாயிலாக பல்வேறு செயலி மற்றும் இணையத்தை அறிமுகம் செய்துள்ளது.
வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட்து முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வருகின்றது. இது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது . இந்நிலையில் வாக்காளர்கள் , வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செயலிகள் மற்றும் இணைய தளங்கள் குறித்து இப்போது பார்க்கலாம் .
தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்து பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில் cVIGIL என்ற ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது . விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீதோ அல்லது கட்சிகளின் மீதோ இந்த செயலின் வாயிலாக புகார் அளிக்க முடியும் . புகார் அளிக்கப்பட்டு ஒன்றரை மணிநேரத்திற்குள் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புகார் அளிக்கப்பட்வருக்கு தெரிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது .
VOTER HELPLINE APP என்ற செயலின் மூலம் வாக்காளர் பெயர் சரி பார்த்தல் , புதிய வாக்காளர் சேர்க்கை தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்புகள் ஆகியவற்றை எளிதில் அறிந்து கொள்ள முடியும். சுவிதா செயலி மூலம் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனு அங்கீகரிக்கப்பட்டு விட்டதா என அறியமுடிகிறது . வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான பரிந்துரைகள் புகார் அளிக்க SUVIDHA என்ற செயலியைப் பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது . இந்த செயலின் மூலம் புகார்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்லபடுவது இதன் சிறப்பான அம்சமாகும் .
வாக்காளருக்கு உதவ 1950 என்ற இலவச என்னை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம் . தேர்தல் நடைபெறும் போது வாக்குச்சாவடியில் நிலவரங்கள் உடனுக்குடன் தேர்தல் ஆணையத்துக்கு எலக்சன் மானிட்டரிங் டஸ்போர்ட் என்ற இணையம் வழியாக பதிவிடப்படுகிறது . மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் பல மாநிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன .இந்த சுழற்சி முறையை கணினி சார்ந்த நெறிமுறை கொண்டு தேர்தல் ஆணையம் எளிதாக கையாளுகிறது .
தேர்தலின் போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் தரவுகள் தரவுகளை நிர்வகிக்க சுகம் என்றஇணையத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது . அரசியல் கட்சிகள் பரப்புரை செய்வதற்கான அனுமதியை சுவிதா சுவிதா என்ற இணையதளம் வாயிலாகவும் பெறலாம் . உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை தொழில்நுட்ப வசதிகளுடன் சிக்கலின்றி நடத்தி முடிக்க இந்த செயலிகள் மற்றும் இணையதளங்கள் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை . அதே சமயம் இந்த செயல்கள் குறித்து விளம்பரங்கள் வாயிலாக போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது கடமையாகும் .