Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞரிடம் முரண்பட்ட பேராசிரியர்… ஆனாலும் கட்சியை விட்டு போகல… ஏன் தெரியுமா ? பரபர தகவல்!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் இடம் ஒரு முறை கேட்கப்பட்ட கேள்வி, உங்களுடைய சமகால இயக்கத்தினுடைய தோழர்கள் யாரை நம்பி ? யாரை எண்ணி ? நீங்கள் பெருமை அடைகிறீர்கள் ? என்று சொன்னபோது,  அதற்கு ஏன் ? என்று கேட்டபோது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடனடியாக சொன்ன பதில்…

நான் பெருமைப்படக்கூடிய நண்பன் எங்களுடைய இனமான பேராசிரியர் என்று பேராசிரியரின் பெயரை சொன்னார். சொல்லிவிட்டு அவர் சொன்னார்,  அண்ணா அவர்கள் சென்னைக்கு வரும்போது எல்லாம்…  இனமான பேராசிரியரின் வீட்டில் தான் தங்குவார், அப்போது நானும், நாவலரும், சம்பத் போன்றவர்கள் எல்லாம் அண்ணாவிடம் உரையாற்றுகின்ற வாய்ப்பு அண்ணாவிடம் இருந்து பல விவரங்களை தெரிந்து கொள்கின்ற வாய்ப்பு எங்களுக்கு எங்கேயும் கிடைத்தது என்று சொன்னால், இனமான பேராசிரியர் உடைய இல்லத்தில் தான் என்று சொல்வார்.

இயக்கத்தை விட்டு தலைவர்கள் சிலர் பிரிந்து சென்ற போது,  நம் இனமான பேராசிரியர் அவர்களை இயக்கத்திற்கு அழைத்த போது அவர் நினைத்திருந்தால் அங்கே சென்று அதற்கான பதவியை வகித்திருக்கலாம். ஆனால் இனமான பேராசிரியர் அவர்களை பொறுத்தவரையில் கொள்கைதான் முக்கியம், எனக்கு கட்சி தான் முக்கியம் என்று சொல்லி, ஏன் பல நேரங்களில் என்னோடு கருத்து பேதங்கள் அவருக்கு இருக்கிறது என்று சொன்னாலும்,

எனக்காக இந்த இயக்கத்தில் இருந்தார் என்று சொல்வதைக் காட்டிலும்,  இயக்கத்தினுடைய கொள்கைக்காக கட்சிக்காக இறுதிவரை இருந்தவர் தான் நம்முடைய இனமான பேராசிரியர் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர் இனமான பேராசிரியர் அவர்கள் என பெருமிதம் அடைந்ததாக குறிப்பிட்டார்.

Categories

Tech |