மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் இன்று மோடி ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இது வரை 3 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் 4 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 29_ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபாடு வருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளது. இங்கு 4 கட்டமாக தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து முதல் கட்டமாக கடந்த 11_ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 7 மக்களவை தொகுதிகளுக்கும், 18_ஆம் தேதி நடைபெற்ற 2_ஆம் கட்ட வாக்குப்பதிவில் 10 தொகுதிகளுக்கும், 23_ஆம் தேதி நடைபெற்ற 3_ஆம் கட்ட வாக்குப்பதிவில் 14 தொகுதிகளுக்கும் என மொத்தம் 31 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது.
4_ஆம் மாற்றும் இறுதிக்கட்டமாக வாக்குப்பதிவானது வட மும்பை, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை, வடமத்திய மும்பை, தென்மத்திய மும்பை, தென்மும்பை, நந்துர்பர், துலே, தின்டோரி, நாசிக், பால்கர், பிவண்டி, கல்யாண், தானே, மாவல், சிரூர், ஷீரடி உள்ளிட்ட 17 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகிற 29_ஆம் தேதி நடைபெறுகின்றது. மேலும் இதற்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கின்றது.
மகாராஷ்டிரா காங்கிரஸ் சார்பிலான கூட்டணியும் , சிவசேனா மற்றும் பிஜேபி சார்பிலான கூட்டணியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்களின் கூட்டணியை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்ய பிரதமர் நரேந்திர மோடியும் , ராகுல் காந்தியும் இன்று மும்பை வருகின்றனர். அதில் ஷீரடி பாராளுமன்ற தொகுதி சங்கம்நேர் பகுதியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுலும், மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடியும் கலந்து கொண்டு பேசுகின்றனர். இதில் இரண்டு கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றார்கள்