Categories
தேசிய செய்திகள்

கொரோனா பிடியில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 20.57% ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20.57% ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

இன்று மத்திய சுகாதாரத்துறை செய்தியர்கள் சந்திப்பில் கூறியதாவது, ” நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 23,077 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 681லிருந்து 718 ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் 6,430, குஜராத்தில் 2,624, டெல்லியில் 2,376, ராஜஸ்தானில் 1,964, மத்திய பிரதேசத்தில் 1,699 மற்றும் தமிழ்நாட்டில் 1,683 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,325லிருந்து 4,749 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20.57% ஆக உள்ளது.

மேலும், கடந்த 28 நாட்களாக சுமார் 15 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை. தற்போது நாட்டில் உள்ள 80 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் கொரோனா பாதித்ததாக புதிய வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை” என அவர் கூறியுள்ளார். அதேபோல, கொரோனா தொடர்பாக 541,789 மாதிரிகள் இன்றுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

Categories

Tech |