சென்னை அணியில் களமிறங்கும் 11 வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.
கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.. முதல் போட்டியில் பரம எதிரிகளாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.. இந்த முதல் லீக் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி கோப்பையை தவிர விட்டது..
இதனால் மும்பை அணி மகுடம் சூடியது.. அந்த தருணம் ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களும் ஆழ்ந்த கவலையில் மூழ்கினர்.. சரி அது முடிந்து விட்டது.. ஆனால் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் சென்னை அணி களமிறங்க இருக்கிறது.. ஆகவே முதல் போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.. மேலும் சிஎஸ்கே அணியிலிருந்து ‘சின்ன தல’ என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா விலகி உள்ளதால் அவரிடத்தில் யார் ஆடப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு உள்ளது தற்போதைக்கு யார் என்று தெரியவில்லை.. சனிக்கிழமை தெரியவரும்..
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சென்னை அணியில் களமிறங்கவுள்ள 11 வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டு உள்ளார்.. அதாவது சேன் வாட்சன், அம்பத்தி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும்.. 3ஆவது வீரராக பாப் டு பிளிசிஸ் 4-வது வீரராக கேதார் ஜாதவ், மிடில் ஆர்டரில் 5ஆவது வீரராக எம்.எஸ் தோனி, அதன்பின் ஜடேஜா, பிராவோ ஆகியோர் விளையாடினால் சென்னை அணி பலம் பெறும் என்று தெரிவித்துள்ளார்..
அதேபோல பந்துவீச்சை பொறுத்தவரை இம்ரான் தாஹிர், பியூஸ் சாவ்லா, ஷர்துல் தாகூர், தீபக் சஹர் ஆகியோர் இடம் பிடிப்பது தான் சரியான அணி கலவையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்..
சென்னை அணியில் 11 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியல் : சேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, பாப் டு பிளிசிஸ், கேதர் ஜாதவ், எம்.எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, பியூஸ் சாவ்லா, டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர், தீபக் சஹர், ஷர்துல் தாகூர்.