சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சினால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதிகளில் தொடர்ந்து சாராயம் காய்ச்சி அதை மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதிகளில் காவல்துறையினர் சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வதும் மற்றும் சாராய ஊறல்களை அழிப்பதும் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து கல்வராயன்மலை சுற்றி அமைந்திருக்கும் கிராமப்புறங்களில் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைத்து பொதுமக்களுக்கு சாராயத்தின் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்பிறகு சாராய விற்பனை செய்பவர்கள் பற்றியும், சாராய காய்ச்ச பயன்படுத்தும் பொருட்களை கடத்துபவர்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக 10581 தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்.