Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த பெண்… “தவறாக நடந்து கொண்ட நபர்”… மரத்தில் கட்டிவைத்த ஊர்மக்கள்..!!

பல்லடம் அருகே வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.. அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவன்  சுற்றி வந்துள்ளான்.. அப்போது பொதுமக்கள் அவனிடம் விசாரித்தனர்.. ஆனால் அவன் சரியான பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுள்ளான்.

இந்தநிலையில், நேற்று வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் அந்த நபர் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளான்.. அப்போது அந்தப்பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார்.. இந்த சத்தம் கேட்டு அந்தபகுதி பொதுமக்கள் அந்த நபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து விட்டு, பின் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.. அதில், திருவண்ணாமலையைச் சேர்ந்த முரளி என்பதும், கட்டட பணிக்காக சில தினங்களுக்கு முன்பு தான் பல்லடம் மகாலட்சுமி நகர் பகுதிக்கு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்தநபரை போலீசார் விசாரணைக்காக பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர்.. பட்டப் பகலில் வீட்டில் தனியாகயிருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரால் அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..

Categories

Tech |