உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜியாபாத் என்ற நகரைச் சேர்ந்தவர் தான் ஷாஹித்.. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில், வேறொரு பெண்னை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தபெண் ஷாஹித்தை வற்புறுத்தியிருக்கிறார்..
ஆனால், ஷாஹித் 2ஆவது திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.. இதனிடையே, ஆகஸ்ட் 10ஆம் தேதி இருவருக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து, ஷாஹித் அந்தப் பெண்ணை கொடூரமாக கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஷாஹித் தான் கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து ஷாஹித்தை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பெண்ணை கொடூரமாக தாக்கும் காட்சியும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.. குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு சிசிடிவி காட்சி பெரும் உதவியாக இருந்தது என காஜியாபாத் காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி கூறியுள்ளார்.. ஷாஹித் பயன்படுத்திய பைக், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கற்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.