பூங்காவை பராமரிக்காமல் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அதை சீர் செய்ய பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சி நிர்வாகம் மூலமாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறுவர்கள் விளையாடி மகிழ சறுக்கு மற்றும் ஊஞ்சல் ஆகிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவிற்கு வந்து விளையாடி மகிழ்ந்து வந்துள்ளனர். ஆனால் நீண்ட காலமாக சரியான பராமரிப்பு இல்லாததால் விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனையடுத்து பூங்கா வளாகத்தில் செடி மற்றும் கொடிகள் வளர்ந்து புதர் போன்று காணப்படுகிறது.
இதை பற்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது பல லட்சம் செலவழித்து அமைக்கப்பட்டிருக்கும் பூங்காவை பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த நிலையானது நீடித்துக்கொண்டே சென்றால் எதிர்காலத்தில் பொது இடமாக அமைந்திருக்கும் பூங்கா தனிநபர் சொத்தாக மாறிவிடலாம் என அவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பூங்காவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு பழுது அடைந்திருக்கும் விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து புது பொலிவு பெற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கூறியுள்ளனர்.