வீட்டுமனை வேண்டி பொதுமக்கள் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நல்லி தோட்டம் அருகாமையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் சிலர் ஆக்கிரமித்து 6-க்கும் மேற்பட்ட குடிசைகளை அமைத்து வீட்டுமனை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் விருப்பம் சத்திரம் பகுதிகளில் 50 வருடங்களுக்கு மேலாக 160 குடும்பங்கள் வசித்து வருகிகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 61 குடும்பகளுக்கு மட்டுமே வீட்டுமனை வழங்கபட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள 99 குடும்பகளுக்கு வீட்டுமனை வழங்கப்படவில்லை. இந்த காரணத்தினால் தான் இன்று பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த கலெக்டர் உங்களுடைய கோரிக்கை ஏற்று வீட்டுமனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து திரும்பிச் சென்றுள்ளனர்.