Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மின் கட்டணதிருக்கும் ஜி.எஸ்.டி” பொதுமக்கள் அதிர்ச்சி…. அதிகாரிகளின் உத்தரவு….!!

ஜி.எஸ்.டி வரியானது வீடுகளின் மின் கட்டணத்திலும் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக வீடு, கடை, தொழிற்சாலைகளுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மின்சாரத்திற்கு 2 மாதத்திற்கு ஒருமுறை கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மின்சார அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்று பணத்தை செலுத்திய நிலையில் கூடுதலாக ஜி.எஸ்.டி கட்டணமாக 18 ரூபாய் செலுத்த வேண்டும் என அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பொதுமக்கள் மின்சாரத்திற்கும் ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா என கேட்டு சிலர் பணம் கட்டியுள்ளனர். ஆனால் ஒரு சிலர் பணம் கட்டாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளனர். அதன்பின் திடீரென மின்சார கட்டணத்திற்க்கும் ஜி.எஸ்.டி வசூல் செய்ய ஆரம்பித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து விலைவாசி உயர்வு, டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல இன்னல்களை பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர். பின்னர் சில வீடுகளில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பதாக அதிக மின் கட்டணம் வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென மின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஜி.எஸ்.டி வசூல் செய்வதை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி அதிகாரிகளிடம் கேட்ட போது பொருட்கள் வாங்கும் போது அனைத்திற்க்கும் ஜி.எஸ்.டி செலுத்துகிறோம். இருப்பினும் மின்வாரியத்தில் இதுவரை இல்லை. ஆனால் தற்போது ஜி.எஸ்.டி வசூலிக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |