Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு சொத்து வேணும்… மறுத்த முதல் மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்… ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்..!!

கடந்த 2016ஆம் ஆண்டு சொத்துக்காக  தன்னுடைய முதல் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த நல்லம்மாள் என்பவரைத் கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.. இதையடுத்து சில வருடங்களுக்குப் பிறகு நல்லமாளின் சகோதரி ஜெயாவை 2ஆவதாக கல்யாணம் செய்துள்ளார்.. இந்நிலையில் முதல் மனைவியான நல்லம்மாள் பெயரில் அதிகளவு சொத்துக்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் கருப்பையா சொத்து அனைத்தையும் கேட்டு பலமுறை நல்லம்மாளிடம் தகராறு செய்து வந்துள்ளார்.. நல்லம்மாள் சொத்தினை கொடுக்க மறுக்கவே, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று கருப்பையா ஆத்திரத்தில் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே நல்லம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வீடியோ அழைப்பின் மூலமாக வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, சொத்துக்காக தன்னுடைய முதல் மனைவியை வெட்டிக்கொலை செய்த கருப்பையாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Categories

Tech |