ஆப்கானில் சிக்கிய சீக்கியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி பஞ்சாப் முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்..
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தலிபான்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.. அரசுப்படைகளுடன் இணைந்து அமெரிக்கப்படைகளும் போரிட்டு வந்தனர்.. இந்த சூழலில் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து திரும்ப பெறப்படும் என அதிபர் பைடன் அறிவித்தார்.. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களையும், மாகாணங்களையும் தலிபான்கள் கைப்பற்றி வந்த சூழ் நிலையில் காபூல் நகரத்தையும் அவர்கள் கைப்பற்றினர்.. குடியரசுத் தலைவரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி விட்டார்..
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் அங்கிருந்து வெளியேறி விட்டார்கள். காபூல் விமான நிலையத்திலிருந்து தொடர்ந்து விமானங்கள் மூலம் தூதர்கள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் வெளியேறிக் கொண்டு இருந்தார்கள்.. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய நாட்டைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி கொண்டிருந்தனர்.. இந்தியா நேற்று அனுப்பிய விமானம் மூலம் 129 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்..
இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று பிற்பகல் 12 : 20 க்கு டெல்லியிலிருந்து காபூலுக்கு விமானம் புறப்பட்டு அங்குள்ள இந்தியர்களை அழைத்து வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான் அமைப்புகள் அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்..
இந்நிலையில் ஆப்கானில் சிக்கிய 200க்கும் மேற்பட்ட சீக்கியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.. தலிபான்கள் பிடியிலுள்ள 200க்கும் மேற்பட்டவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பஞ்சாப் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.. அதே போல தற்போது அங்கு துப்பாக்கிச் சூடு மற்ற விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.