Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடக்கத்தில் பாய்ந்த ராஜஸ்தான் இறுதியில் பம்மியது…… பஞ்சாப் அணி ருசிகர வெற்றி…!!

பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.  

ஐபிஎல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . இதையடுத்து  தொடக்க வீரராக கே.எல் ராகுல் , கிரிஸ் கெயில்  களமிறங்கினர்.ஆட்டத்தில் முதல் ஓவரே கே.எல் ராகுல் 4 ரன்னில் ஆட்டமிழக்க பொறுப்புடன் ஆடிய மயங் அகர்வால் 22 ரன் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய கிரிஸ்  கெயிலுடன் இணைந்தது சர்பராஸ் கான் தனது பங்குக்கு ரன் குவிப்பை வேகப்படுத்தினர்.

இருவரின் அதிரடியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு  184  குவித்தது . அந்த அணியில் அதிகபட்சமாக கிரிஸ் கெயில் 79(47) , சர்பராஸ் கான் 46(29)* ரன் குவித்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அணியின் ஸ்கோர் 78 இருந்த போது ரஹானே 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 43 பந்தில் 69 ரன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து வீசுவதற்குள் கிரீஷுக்கு வெளியே வந்த நிலையில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்..

இதை தொடர்ந்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 19,  சஞ்சு சாம்சன் 30,  பென்ஸ்டோக்ஸ் 6 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதை தொடர்ந்து வந்த வீரர்கள் ஒற்றை இழக்க ரன்னில் ஆட்டமிழக்க இறுதியில் 170 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. பஞ்சாப் அணியில் கர்ரன், முஜீப், ராஜ்பூட்  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Categories

Tech |