Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ” கேட்ட கேள்வி…. ”பேராசிரியர்” சடார்ன்னு எழுந்து செம பதிலடி…. அன்பழகன் கவுண்டரில் திணறிய C.M!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, நான் கூட்டம் போட்டு அவர்கள் பேசுவதை கேட்டு  மகிழ்ந்திருப்பேனே தவிர,  எனக்காக நான் கூட்டம் போட்டதே கிடையாது, எனக்காக நான் பேசியதும் கிடையாது. எங்கள் ஊரில் கூட கூட்டம் போடும் போது நான் நாலு இடத்திலே கூட்டம் நடந்தால் முதலிலே பேசிவிட்டு,  நான் உடனடியாக அடுத்த கூட்டத்திற்கு சென்று விடுவேன். ஆனால் இன்றைக்கு சுப்ரமணியம் என்னை மட்டும் வைத்துவிட்டு அவர் வெளியே சென்று இருக்கிறார்கள்.

பேராசிரியரை பார்த்து ஜெயலலிதா ஒரு கேள்வி கேட்டார், நீ துணை பேராசிரியர் தானே…  உன்னை பேராசிரியர் என்று சொல்லிக் கொள்கிறார் என்று கேட்டார். பேராசிரியர் சடார் என்று எழுந்து,  ஆம், நான் துணை பேராசிரியர் தான். என்னுடைய தோழர்கள் என் வைத்திருக்கின்ற அன்பின் காரணமாக என்னை பேராசிரியர் என்று சொல்கிறார்கள். அது சரி நான் முன்னே பார்த்த தொழிலை சொல்லி விட்டேன், முதலமைச்சர் நீங்கள் முன்னே பார்த்த தொழிலை சொல்ல முடியுமா என்று கேட்டார்கள்.

ஏன் இதை சொல்லுகிறேன் என்று சொன்னால், யாரையும் எதிர்த்து நிற்கின்ற தைரியமான நபர்  என்று சொன்னால் அது பேராசிரியர் அவர்கள் தான். அண்ணா அவர்களிடம் அப்படி இருந்திருக்கிறார், கலைஞர் அவர்களிடத்திலும் அப்படி இருந்திருக்கிறார், எங்களைப் போன்றவர்களை எப்படி வளர்க்க வேண்டுமோ,  அப்படி வளர்த்து தந்திருக்கிறார் பேராசிரியர் அவர்கள்.  இங்கே இருக்கின்ற கவுன்சிலர்களுக்கு கூட போட்டி வந்துவிடும், தலைவருக்கு ஒருவர்,  இவர் என்று…  அவர் என்று போட்டி வந்துவிடும். ஊராட்சித் தலைவர் இருந்தாலும் கூட போட்டி வந்துவிடும் என தெரிவித்தார்.

Categories

Tech |