Categories
அரசியல் மாநில செய்திகள்

‘வரும் 23ஆம் தேதி, சென்னையில் திமுக தலைமையில் பேரணி..!!

 சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைமையில் வரும் 23ஆம் தேதி எதிர்க்கட்சிகள் சார்பாக பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிகுமார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது வரும் 23ஆம் தேதி, சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் சார்பாக பேரணி நடைபெறும் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |