Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 58% ஆக உள்ளது!

பல்வேறு குழுக்கள் அமைத்து கொரோனா தடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். சென்னையில் கொரோனோவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 58% ஆக உள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்ட 56,000 பேரில் 36,000 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொடர்பான விவரங்களை அறிய மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் தொடர்பு கொள்ள 15 தொலைபேசி எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது என அவர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணியில் உள்ளாட்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை இணைந்து பணியாற்றி வருகிறது என அவர் தகவல் அளித்துள்ளார்.

Categories

Tech |