வைகோவுக்கு மதிமுக சார்பில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது சத்தியம் சினிமா தியேட்டர். இந்த சத்தியம் சினிமா தியேட்டரில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது, அதில் ஹீரோக்களை பார்த்திருக்கிறோம், திரைப்படத்தில் நடிக்க கூடிய ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கக்கூடிய இந்த சத்தியம் தியேட்டரில் உண்மையான ஹீரோவை பார்க்கிறோம்.
ரியல் ஹீரோ என்றால் அண்ணன் வைகோ தான். திரைப்படத்தில் வரக்கூடிய ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டு இருக்கக்கூடிய, இயக்கம் செய்து, திரைப்படத்திற்காக சித்தரிக்கப்படக்கூடிய ஹீரோ, ஆனால் இவர் சித்தரிக்கப்படாத ஹீரோவாக வைகோ அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். ரியல் ஹீரோ மட்டுமல்ல, கொள்கையிலும் ஹீரோ, லட்சிய ஹீரோ,
தியாகத்தால் உருவாக்கி இருக்கக்கூடிய ஹீரோ, எழுச்சி மிக்க ஹீரோ, உணர்ச்சி மிக்க ஹீரோ, ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு போராளி ஹீரோ. அவர் உயரத்தில் மட்டும் உயர்ந்தவர் அல்ல, கொள்கையில் உயர்ந்தவர், லட்சியத்தில் உயர்ந்தவர், தியாகத்தில் உயர்ந்திருக்கக் கூடியவர் அண்ணன் வைகோ அவர்கள். அவரை வைத்து நான் எத்தனையோ கூட்டங்களை நடத்தி இருக்கிறேன் மாணவனாக இருந்தபோது, இளைஞர் திமுக என்று அமைப்பு முதல் முதலில் கோபாலபுரத்தில் தொடங்கிய போது, அவரிடத்தில் தேதி வாங்கி பெரிய பெரிய கூட்டத்தை நடத்திருக்கிறேன் என தெரிவித்தார்.