குக் வித் கோமாளி பிரபலம் பாலாவின் பாராட்டிற்குரிய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சீசன் 6 போட்டியாளராக பங்கேற்று பின் டைட்டில் வின்னர் ஆனவர் தான் பாலா. இதை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர் மீண்டும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இணைந்து பல ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை சம்பாதித்துள்ளார்.
இந்நிலையில் இவரது நடிப்பு திறமையை எந்தளவுக்கு பாராட்டுகிறார்களோ அதேபோல இவரது குணமும் பாராட்டக்கூடிய வகையில்தான் உள்ளது. அந்த வகையில் இவர் தெருவோரம் அமர்ந்திருக்கும் பாட்டி ஒருவருக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.