நடிகை அனுஷ்கா முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்து, இயக்கிய படம் “முந்தானை முடிச்சு”. 1983ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் வெற்றி பெற்றதால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சசிகுமார் “முந்தானை முடிச்சு” இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. அனுஷ்காவை கதாநாயகியாக நடிக்க அணுகியதாகவும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அனுஷ்காவிற்க்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், எனவே அவர் புதிய படங்களை ஏற்கவில்லை என்றும் அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.