இஸ்லாமிய பெண்ணின் விவாகரத்து தொடர்பான காரணத்தைக் கேட்ட நீதிமன்றம் வியப்பில் ஆழ்ந்தது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் இஸ்லாமியர்களுக்கான ஷாரியா நீதிமன்றத்தில் இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் கணவனிடமிருந்து விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். இந்த விவாகரத்திற்கு அவர் கூறிய காரணம் நீதிமன்றத்தாரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் “என்னுடைய கணவரின் அன்பு என்னை மூச்சுத்திணற செய்கிறது. என்னிடம் கோபமாக பேசுவதில்லை, என்னை எந்த ஒரு விஷயத்திலும் வருத்தமடைய செய்வதில்லை, எனக்காக சமைத்துக் கொடுப்பதுடன் எனது வீட்டு வேலைகளிலும் உதவி செய்கிறார். நான் எப்போது தவறு செய்தாலும் என்னை மன்னித்து விடுகிறார்.
நான் அவரோடு சண்டை போட விரும்புகிறேன். அனைத்து விஷயத்திற்கும் கணவன் ஒத்துக்கொள்ளும் ஒரு வாழ்வை நான் விரும்பவில்லை.” என அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஷாரியா நீதிமன்றதினர் இந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இதை தொடர்ந்து அப்பெண் உள்ளூர் பஞ்சாயத்தை அணுகியுள்ளார் ஆனால் அவர்களும் கைவிரித்து விட்டனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவன் தான் மனைவியை மிகவும் நேசிப்பதாகவும், எப்பொழுதும் சந்தோஷமாக வைத்திருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். எனவே மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். இதையடுத்து விவாகரத்தை பேசி தீர்த்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் இருவருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.