Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 53.29% உயர்வு… மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 53.97% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,386 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,04,710 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,586 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,80,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 336 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் மொத்த உயிரிழப்புகள் 12,573 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 248 ஆக உள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சிகிச்சையில் இருப்பவர்களை விட அதிகரித்து வருவது நிம்மதியான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |