பிக் பாஸ் வீட்டில் இருந்து நமிதா மாரிமுத்து வெளியேறியதற்கான உண்மை காரணம் தெரியவந்துள்ளது.
பிரபல விஜய் டிவியில் பிக்பாஸ் 5 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். ஆனால் முதல்முறையாக பிக்பாஸில் பங்கேற்ற திருநங்கை நமீதா மாரிமுத்து அவர்கள் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இவரது வெளியேற்றத்திற்கு பல காரணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. ஆனால் உண்மையான காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி நமிதா வெளியேறுவதற்கு முதல்நாள் தாமரைச்செல்வியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த காட்சிகளை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இதுதான் நமீதாவின் வெளியேற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் தாமரைச்செல்வி சிரித்ததை தவறாக புரிந்து கொண்ட நமீதா ஒரு நாள் முழுவதும் மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். இதனை அறிந்த சக போட்டியாளர்களும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் எதற்கும் சமாதனம் ஆகாத நமீதா மன அழுத்தத்திற்கு ஆளாகி வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் அவருக்கு பிக்பாஸ் ரெக்கார்ட் கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.