நாமக்கல் மாவட்டத்தில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள ஆண்டிமடம் பகுதியில் கொக்கி என்ற ராஜ்குமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமார் கடந்த 2 வருடங்களுக்கு முன் சமூக வலைத்தளம் மூலம் அந்த சிறுமியிடம் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி இளைஞன் சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து ராஜ்குமார் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனடியாக நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை கடத்தி சென்று தொல்லை கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுமியை மீட்டுள்ளனர். மேலும் ராஜ்குமாரை நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்செங்கோடு கிளை நீதிமன்றத்தில் அடைத்துள்ளனர்.