திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நகைச்சுவை நடிகர் சூரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதைதொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 40 வருட கடின உழைப்பிற்கும் ,பொறுமைக்கும் பலனாக 6 வது முறை தி.மு.க சார்பில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் கழக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
40 வருட கடின உழைப்பிற்கும் ,பொறுமைக்கும் பலனாக 6 வது முறை தி.மு.க சார்பில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐🙏 pic.twitter.com/PuctFNaPSq
— Actor Soori (@sooriofficial) May 2, 2021