Categories
மாநில செய்திகள்

 “5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு” அரசாணையை திரும்பப்பெறுக… முக ஸ்டாலின் கண்டனம்..!!

 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்களின் தேர்ச்சியை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன்  பொது தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி இயக்குனர்களுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Image result for முக ஸ்டாலின் கண்டனம்

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அரசின் அவசர அரசாணைக்கு திமுக சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை உடனடியாக தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். விதவிதமான பொதுத்தேர்வுகளால் மாணவர்களுக்கு கடும் மன அழுத்தமும், நெருக்கடியும் உருவாகும். அடிப்படை உண்மையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உணராதது மிகவும் கவலையளிக்கிறது என்று கண்டனத்துடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |