Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதுவரை என்ன செய்தோம்… நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்… பங்கேற்ற முக்கிய அதிகாரிகள்…!!

கொரோனா தொற்றின் பரவல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை வகித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்ற காரணத்தால் அதனை தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான முறையில் உள்ளாட்சித் துறை வருவாய் மாவட்ட அலுவலர்கள், மருத்துவர்கள், கள அலுவலர்கள் ஆகியோர்களுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், புவியியல் சுரங்கத் துறை இயக்குனர் சுப்பிரமணியன் போன்றோர் முன்னிலை வகித்தனர்.

இதற்கு முன்னதாக காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொது மக்களுக்காக கொரோனா தொற்றை பரிசோதனை செய்யும் நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் அந்தக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், காவல்துறை துணை தலைவர் சாமுண்டீஸ்வரி, செல்வபெருந்தகை, சி.வி.எம்.பி எழிலரசன், மாவட்டக் காவல்துறை சூப்பிரண்டு சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் எம்.பி செல்வம் போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |