கொரோனாவின் மிரட்டல் காரணமாக இத்தாலியில் திருமணங்கள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா. 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா குடியிருக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் இத்தாலியில் திருமணத்திற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாக இருக்க வேண்டும் எனவும், விழாவிற்கு வருபவர்களை முன்புபோல கட்டியணைத்து முத்தம் கொடுத்து வரவேற்பதையும் தவிர்க்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் நாற்காலிகளில், அமரும்போது குறிப்பிட்ட இடைவெளி விட்டே அமர வேண்டும் என்றும், கூறப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டில் இருந்து மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான காதல் ஜோடியினர், அந்நாட்டிற்கு திருமணம் செய்வதற்கு வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற திருமணங்களில் கலந்து கொள்வதற்காக மட்டும் 4, 36,000 பேர் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.