Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையை சரி பண்ணலைனா மறியல் தான்…… காங்கிரஸ் MP எச்சரிக்கை….!!

பழுதாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கவில்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோமென காங்கிரஸ் MP வசந்த குமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வில்லை என்றால் வருகின்ற 16ஆம் தேதி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் தெரிவித்துள்ளார்.

Image result for வசந்தகுமார்

கன்னியாகுமரி மாவட்ட திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது  அவர் இவ்வாறு தெரிவித்தார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். ஆகையால் விரைந்து அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 16 ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பொதுமக்களுடன் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |