Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. 2 பேர் உடனடி கைது….!!

ஸ்கேன் சென்டர் மேலாளர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நாகர்கோவில் மாவட்டம் சைமன்நகர் பகுதியில் சங்கர நாராயணன் வசித்து வருகிறார். வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஸ்கேன் சென்டரில் மேலாளராக வேலை செய்து வரும் இவர் சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி பிருந்தாவும் குழந்தையை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சங்கர நாராயணனின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே இருந்த 62 பவுன் நகை, 90 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி தப்பியோடினர்.

இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சங்கர நாராயணன் உடனடியாக நேசமணி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தபுகாரின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி நவீன்குமார் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமாராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்மநபர்கள் சங்கர நாராயணன் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த நபர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாந்தகுமார், விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த சிவகுமார் ஆகிய இருவரையும் கைது செய்யதனர்.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் நெல்லை தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததும்,  வேலையை விட்டுவிட்டு பணக்காரர்களாக வேண்டும் என்ற ஆசையில் இதுபோல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு  தெரியவந்தது.  இதனைதொடர்ந்து போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |