கிரிவலம் சென்று திரும்பிய தம்பதியினரை தாக்கி நகை பறித்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகில் உள்ள பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் அருணா தம்பதியினர். நேற்றைய முன் தினம் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்றன.ர் கிரிவலம் முடித்து இரவு 2 மணி அளவில் வீட்டிற்குத் திரும்பினர். வரும் வழியில் செல்வா நகர் வந்த பொழுது எதிரே பைக்கில் வந்த இருவர் தம்பதியினரை வழிமறித்து அருணாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் சத்தம் போட்டு கூச்சலிட்டனர்.
சுதாரித்துக்கொண்ட மர்மநபர்கள் தம்பதியினரை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றனர் அவ்வழியாக வந்த மக்கள் காயமடைந்த இருவரையும் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.