காதல் திருமணம் செய்த இளம் ஜோடிகள் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னமூக்கனூர் பகுதியில் ரவி – செல்வி தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜெயந்தி என்ற மகள் இருக்கிறார். இவர் கடந்த 12 ஆம் தேதியன்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். ஆனால் ஜெயந்தி வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஜெயந்தியின் தாயார் செல்வி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் படி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அந்த விசாரணையில் பள்ளி வட்டம் பகுதி வசிக்கும் சுந்தர் என்ற வாலிபரும், ஜெயந்தியும் காதலித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இருவரும் வெலக்கல்நத்தம் பகுதியில் இருக்கும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அதே காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் இருவருடைய பெற்றோரையும் அழைத்து சமரசமாக பேசி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஜெயந்தி மற்றும் சுந்தருக்கு காவல்துறையினர் சில அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.