Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை…… மாணவர்களை காப்பாற்றிய மதிய இடைவேளை….. கோவையில் பரபரப்பு….!!

கோவையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியை  அடுத்த கஞ்சமலை எஸ்டேட் ஏரியாவில் சுமார் 60 ஆண்டுகள் பழமையான அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி கூடம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கூடத்தில் 34 மாணவர்கள்  பயின்று வர 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வப்போது ஊருக்குள் வரும் காட்டு யானைகள் இந்தப் பள்ளிக்கூடத்தை பலமுறை உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளது.

அப்பொழுது ஏற்பட்ட மேற்கூரை சேதத்தினால்  மழைக்காலங்களில் மழை நீர் பள்ளி வகுப்பறைக்குள் ஒழுகும். இவ்வாறு இருக்கையில் கஞ்சமலை எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் பள்ளிக்கூடத்தின் மேற்கூரை சீரமைப்பு பணி நேற்றைய தினம் நடைபெற்று வந்தது. ஒரு வகுப்பறையில் மேற்கூரை சீரமைப்பு பணி நடைபெற்று வர மற்றொரு வகுப்பில் மாணவர்கள் அமர்ந்து பாடம் பயின்று வந்தனர்.

இதையடுத்து மதியம் ஒரு மணி அளவில் மாணவ மாணவிகள் சாப்பிட சென்ற வேளையில் மேற்கூரை பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்பொழுது  திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் மேற்கூரையில் இருந்த ஓடுகள், மரக்கட்டைகள் உட்பட அனைத்தும் விழுந்து நாசமாகின. நல்லவேளையாக மாணவ-மாணவிகள் வெளியில் இருந்ததால் எந்த ஒரு மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இது குறித்து வட்டார கல்வி அலுவலர்க்கு உடனடியாக தலைமையாசிரியை தகவல் தெரிவிக்க அங்கு விரைந்து சென்ற அவர்கள் பள்ளியை பார்வையிட்டு உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளித்தனர். மேலும் வால்பாறையை சுற்றியுள்ள அனைத்து பள்ளிகளையும் சோதனை செய்து பழமையான கட்டிடங்களை மாற்றி பாதுகாப்பான கட்டிடங்களை கட்டி தர  கோரி பெற்றோர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |