நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை அடுத்த குப்புச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 240க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் மேற்கூரை அதிகாலையில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் அமரும் மேசை பாடப்புத்தகங்கள் வைக்கும் கல்லாலான அலமாரி உள்ளிட்டவை சேதமடைந்தன.
பள்ளி நேரத்தில் இந்த விபத்து நடந்திருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் வகுப்பறை சேதமடைந்துள்ளதால் அந்த வகுப்பு மாணவர்களை பள்ளி மைதானத்தில் உள்ள மரத்தடியில் அமரவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.