Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடிக்கொண்டிருக்கும் போதே… மளமளவென பற்றி எரிந்த கார்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சென்ற கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியில் ஊராட்சி குழு தலைவரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆகஸ்ட் 1 – ஆம் தேதியன்று ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்று அரசு காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருடன் தி.மு.க. துணைச்செயலாளரான கருத்தராஜா என்பவரும் ஒய்.எம்.ஆர்.பட்டி பகுதியில் வசிக்கும் கார் டிரைவரான சாமியப்பன் என்பவரும் உடனிருந்துள்ளனர். அந்தக் கார் போடிகாமன்வாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன் பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது.

இதனை அடுத்து டிரைவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு சாமர்த்தியமாக மூவரும் காரிலிருந்து இறங்கிய அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அதன் பிறகு சிறிது நேரத்திலேயே கார் தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காரில் பற்றி எரிந்த  தீயை அணைத்துவிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |