Categories
தேசிய செய்திகள்

“கண்ணெதிரே மரணம்” மகளின் திருமணத்தில் பாட்டு பாடிய தந்தைக்கு நிகழ்ந்த துயரம்…!!

திருமண நிகழ்வில் இன்னிசை கச்சேரியுடன் இணைந்து பாடிக்கொண்டு இருந்த பெண்ணின் தந்தை தீடிரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் திருமண நிகழ்வு நல்ல படியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமண விழாவிற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களை மகிழ்விக்க பாட்டு இன்னிசை கச்சேரி நடைபெற்றுக்கொண்டு இருந்தது.அதை விருந்தினர்கள் ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது பெண்ணின் தந்தை மேடையில் பாடிக்கொண்டு இருந்தார்.

கீழே இருந்த விருந்தினர்கள் பெண்ணின் தந்தை பாடுவதை ரசித்துக்கொண்டு இருக்கும் போது தீடிரென பாடிக்கொண்டு இருந்தவர் மேடையிலே விழுந்தார். இதனால் பதறி போன உறவினர்கள் என்ன அச்சு என்று பார்த்த போது அவர் இறந்து போனது தெரியவந்தது. திருமண விழா நடைபெற்றுக்கொண்டு இருந்த போது பெண்ணின் தந்தை மணமகள் கண் முன்னே இறந்து போனதால் மகிழ்ச்சியான திருமண நிகழ்வு சோகத்தில் மூழ்கியது. பாடிக்கொண்டு இருந்த போது தீடிரென கீழே விழும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |