சேலத்தில் மர்ம பொருள் வெடித்து விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் அண்ணனே தம்பியை கொலைசெய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள தும்பல்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி இரவு விவசாயி மணி வீட்டின் அருகே வானொலிப் பெட்டி ஒன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்த மணி அதனை எடுத்து தனது வீட்டில் வைத்திருந்தார்.
மேலும் அருகிலிருந்த 12 வயது சிறுமி சௌமியா, வசந்தகுமார், நடேசன் உள்ளிட்ட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். காயமுற்ற மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .
இந்த விபத்து தொடர்பாக பனமரத்துப்பட்டி போலீசார் வெடித்துச் சிதறிய பொருள் என்ன என்பது குறித்து தடவியல் வல்லுநர்கள், வெடிகுண்டு வல்லுநர்கள் மூலம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், உயிரிழந்த விவசாயி மணிக்கும் அவருடைய மூத்த சகோதரர் செங்கோடனுக்கும் நீண்ட நாள்களாக வழித்தடத் தகராறு இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த வழித்தடத் தகராறு காரணமாக மணியை கொலைசெய்ய திட்டதீட்டிய செங்கோடன் வானொலியில் வெடிக்கும் ஜெலட்டின் தோட்டாக்களைப் பயன்படுத்தி மின்சார இணைப்பு கொடுத்தால் வெடிக்கும் வகையில் தயார்செய்து அதை மணியின் வீட்டருகே வைத்துவிட்டுச் சென்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது.
வழித்தடத்திற்காக தம்பியை அண்ணன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.