ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஓஎஸ் 06 செயற்கைக்கோள் உட்பட சில செயற்கைக்கோள்களை இஸ்ரோ ஏவி இருந்தது. இதில் இஓஎஸ் 06 என்பது ஓசன் சாட் வகை செயற்கைக்கோளில் 6-வது தலைமுறையை சார்ந்ததாகும். இந்த செயற்கைக்கோள் 1117 கிலோ எடை கொண்டதாகும்.
இது கடல் நிறம், மேற்பரப்பு வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்ற செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை வழங்கு வதற்காக அனுப்பப்பட்டது.
தற்போது இஓஎஸ் 06 எடுத்த படங்களை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அண்மையில் விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட இஓஎஸ் 06 எடுத்த ஆச்சரியமூட்டும் புகைப்படங்களை நீங்கள் பார்த்தீர்களா. குஜராத்தின் சில அழகான பகுதிகளை நான் பகிர்கிறேன் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Have you come across breathtaking images from the recently launched EOS-06 satellite? Sharing some beautiful images of Gujarat. These advances in the world of space technology will help us to better predict cyclones and promote our coastal economy too. @isro pic.twitter.com/JD6eu7JzOK
— Narendra Modi (@narendramodi) December 2, 2022