Categories
கிரிக்கெட் விளையாட்டு

MIvsCSK முதல் போட்டியில் மோதுமா… இன்று ஐபிஎல் 2020 அட்டவணை வெளியீடு… மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருடத்தின் ஐபிஎல் டி20 வரும் 19ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ளது. ஒவ்வொரு வருடமும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வெகுவிரைவில் அட்டவணை வெளியிடப்படும். ஆனால் அபுதாபி, துபாய், சார்ஜா போன்ற இடங்களில் இம்முறை போட்டி நடைபெற உள்ளதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டிய சூழலில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் வீரர்கள் சென்று வருவதற்கு ஒப்புதல் வாங்க வேண்டியது அவசியமாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான் அந்த அனுமதி கிடைத்துள்ளது. இதனிடையே சிஎஸ்கே அணியை சேர்ந்த சிலர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கான போட்டியை எப்போது நடத்துவது என்பது குறித்து நெருக்கடியும் உருவாக்கியுள்ளது இந்நிலையில் இம்முறை நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான கால அட்டவணை நாளை வெளியாகும் என்று ஐபிஎல் சேர்மன் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் விதிமுறைகளுக்கு ஏற்ப தற்போதைய சாம்பியனும் 2-ம் இடம் பிடித்த அணியும் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் ஆட்டத்தில் விளையாடுவார்கள். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் தொற்றினால் முதல் ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்ற கருத்துக்களும் உலாவி வருகின்றது. ஆனால் ஐபிஎல் போட்டி தொடர்பான அட்டவணை நாளை வெளியாகும் என்பதால் குழப்பத்தில் இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |