Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவ்வளவு பேர் வரக்கூடாது… முறையாக செயல்பட தவறிய அதிகாரி… பெற்றோரின் கோரிக்கை…!!

பள்ளியில் முட்டை மற்றும் சத்துணவு பொருட்களை வாங்க 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம்  வகுப்பு வரை 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனையடுத்து கொரோனா பரவல்  காரணத்தால் சென்ற ஆண்டு அரசின் உத்தரவால் கடுவனூர் பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சத்துணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்பின் அரசின் உத்தரவின் படி பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி சத்துணவு பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் முட்டை வாங்குவதற்காக மாணவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் திரண்டுள்ளனர். இதனால் அனைத்து மாணவர்களும் சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக நின்று உள்ளனர்‌. மேலும் முட்டை வழங்க சம்பந்தப்பட்ட சத்துணவு அமைப்பாளர் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு வரவில்லை.

இதனால் மதியம் நேரம் வரை மாணவர்கள் பள்ளியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதைப் பார்த்த பெற்றோர்கள் சிலர் ஊரடங்கு காலத்தில் ஒரே நேரத்தில் பள்ளியில் அனைத்து மாணவர்களையும் இப்படி அழைப்பதை தவிர்த்திருக்கலாம் என கூறியுள்ளனர். இவ்வாறாக ஒரே நேரத்தில் அழைத்ததன் மூலம் மாணவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என பெற்றோர்கள் கூறியுள்ளனர். அதன்பின் இனி வரும் காலங்களில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி மாணவர்களுக்கு தேவையான சத்துணவு பொருட்களை வாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |