Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளியை திறப்பது உறுதி…. ஆனால் வகுப்புதான்… ? ஆலோசனையில் தமிழக அரசு …!!

 பள்ளியை திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் என்பது பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் ஐஏஎஸ் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்  அனைவருமே பங்கேற்றிருக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு பிறகு 16 ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய நான்கு வகுப்புகள் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் இதற்கான வழி காட்டு நெறிமுறைகள் எவ்வாறு வகுக்க வேண்டும் ? அனைத்து மாணவர்களையும் கட்டாயம் வர சொல்வதா ? விருப்பப்பட்ட மாணவர்களை மட்டும் வர சொல்வதா ? அல்லது காலை வேளையில் மட்டும் பள்ளிகளை வைத்து விட்டு மதியம் விடுமுறை விட்டு விடலாமா ? என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப் பட்டிருப்பதால் தற்போது பள்ளியை திறப்பதில் இன்னமும் அரசு உறுதியாக இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு  பள்ளியை திறப்பதால் எப்படி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடலாம் ? என்பது குறித்து ஆலோசிக்க இருக்கிறார்கள். மாவட்ட கல்வி அலுவலர் கொடுக்கக்கூடிய ஆலோசனையின் அடிப்படையில் முடிவு எடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது.

Categories

Tech |