Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குப்பை அள்ள சென்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு… நாகையில் அரங்கேறிய கொடூரம் …!

நாகூரில் பெண் தூய்மை பணியாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி மலர்கொடி. 52 வயதான இவர் நாகை மாவட்டத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை குப்பை அள்ளுவதற்காக மலர்க்கொடி நாகூர் சிவன் மேலே வீதிக்கு வந்ததாகவும், அங்கு மர்ம நபர்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மலர்க்கொடி வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினர்.

இத்தகவல் அறிந்து விரைந்து வந்த நாகூர் போலீசார் படுகாயமடைந்த மலர்க்கொடி மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |