குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பேனா வழங்கிய தினேஷ் என்ற வாலிபர் மீது SDPI அமைப்பு புகார் அளித்துள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பேனா மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டதை கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் காவல்துறையினர் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பேனா வழங்கிய தினேஷ் மீது காவல் நிலையத்தில் எஸ்டிபிஐ சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.